தமிழ்நாடு

"பயிரா ?... உயிரா ?" திமுக MLA-வின் சகோதரி மகன் வெட்டிக்கொலை - தஞ்சை அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, திமுக எம்.எல்.ஏ-வின் சகோதரி மகனை மர்மநபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூர் அருகேயுள்ள பந்தநல்லூர் நெய் குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவர், ஜெயங்கொண்டம் திமுக எல்.எல்.ஏ கண்ணனின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கலைவாணனும் திமுக நிர்வாகியான நிலையில், விவசாயம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று தனது வயலில் உள்ள மின்மோட்டாரை இயக்கச் சென்ற கலைவாணனை, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர். வயல்வெளியில் கலைவாணனை சடலமாக கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் கலைவாணனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொலை சம்பவத்தில், சில மாதங்களுக்கு முன்பு கலைவாணனின் வீட்டில் இருந்த வைக்கோல் போரை மர்மநபர்கள் தொடர்ந்து நான்கு முறை தீயிட்டு கொளுத்தி.... இது தொடரும் என மிரட்டல் விடுத்திருந்ததும், பயிரா?..உயிரா? என பேப்பரில் எழுதி வீட்டுக்குள் வீசிச் சென்றிருப்பதும் தெரியவர... போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்