அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக, திமுக தலைவர் ஸ்டாலின் 13 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அதற்கான உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் அலுவலரிடம் முறையீடு செய்யப்பட்டது. அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.