தமிழ்நாடு

நொடியில் பைக்கை தூக்கி வீசிய கர்நாடக கார்... - துடிதுடித்து பலியான 2 பேர்..

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, அரசு பள்ளி மாணவர் விடுதி சமையலர் உட்பட இருவர் சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செம்பட்டி அருகேயுள்ள போடி காமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு அரசு பள்ளி மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி வந்த இவர், தனது உறவினரான சுப்பிரமணி என்பவருடன் சேர்ந்து வத்தலகுண்டு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார் மோதி தூக்கி வீசப்பட்ட இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

BREAKING || திமுக சார்பில் போட்டியிட 10,000 பேர் விருப்பம்

Breaking | Social Media Ban | "13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை.."