திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த 1983-ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அ.தி.மு.க., எம்.பி., உதயகுமார் கலந்து கொண்டு தனது மாணவ பருவ அனுபவங்களை சக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதேபோல் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி நன்றி கூறினர். ஒவ்வொருவரும் தங்கள் இளமைக்கால அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.