காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஒவ்வொரு நிற பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார், அத்திவரதர்.
வார விடுமுறை தினமான நேற்று மட்டும், இரண்டரை லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று வரை 37 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சயன நிலையில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.