ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கில் முதல் காட்சி தொடங்கும் போது படத்தை வரவேற்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் கட் அவுட் மீது மலர்களை தூவ சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ உரிய அனுமதி வழங்க கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு வருவாய் கோட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வட்டாட்சியருக்கு, கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.