சிதம்பரம் அருகே தெற்குதிட்டை தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தின் போது, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் தரையில் அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடலூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, விசாரணை நடைபெற்று வருகிறது.