தமிழ்நாடு

தேசிகர் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவத்தை ஒட்டி, தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவத்தை ஒட்டி, தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தேவநாத சுவாமி கோயிலில் கடந்த 29ஆம் தேதி முதல் தேசிகர் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுதையொட்டி, அதிகாலையில் பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தேசிகர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில், தேசிகர் ரத்னாங்கி சேவை நடைபெற உள்ளது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’