Tenkasi | Courtallam Falls | ஒரே இரவில் தலைகீழான குற்றாலத்தின் நிலை
#tenkasi #Courtallamfalls #thanthitv
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சீரானதைத் தொடர்ந்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீரான நிலையில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். விடுமுறை நாளை முன்னிட்டு குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது