அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பில் விடுபட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 13 லட்சத்து ஆயிரத்து 277 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் 130 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.