வென்றிலிங்கபுரத்தில் வெண்ணிலிங்க உடையார் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு தேங்காய் எறிந்து கொண்டிருந்த ஒரு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தேங்காய்களை கொண்டு தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்தமரம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.