தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிவகங்கை பேருந்து நிலையத்தில் உணவு பதப்படுத்தும் பிரிட்ஜ், பழைய துணிகளை சேகரிக்கும் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொது மக்கள் வைக்கும் உணவு மற்றும் உடைகளை தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். அட்சயபாத்திரம் என்ற அந்த திட்டத்தை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேலு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 19 கோடி குழந்தைகள் உணவின்றி உறங்க செல்லும் அவல நிலை உள்ளதாக தெரிவித்தார்.