தமிழ்நாடு

Chennai | Vyasarpadi | கோயில் மடத்தின் பின்புறம் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் சடலம்

thanthitv

சென்னை வியாசர்பாடியில் உள்ள சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் பின்புறம், முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வழிபாட்டிற்காக வந்த பக்தர் ஒருவர், புதரில் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வியாசர்பாடி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மர்ம நபர் யார், அவரைக்கொலை செய்த கொலையாளிகள் யார் என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்