சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. இதில், நேற்று நிகழ்த்தப்பட்ட நாடகம் பார்வையாளர்களை கலங்க செய்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் என்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை நாடகம் மூலம் எடுத்துரைத்தனர். சித்தரிக்கப்பட்ட நாடகத்தை கண்ட மக்கள் கண்கலங்கினர். பெண்கள் இரண்டு கைகளையும் பின்னால் கட்டி விலங்கிட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.