#Chennai #PowerCut #RailwayJunction #ThanthiTV
Chennai Power Cut | சென்னையில் திடீரென கும்மிருட்டான ரயில் நிலையம் - பயணிகள் கடும் அவதி
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடையால், ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். போதிய வெளிச்சம் இல்லாததால், ரயிலில் இருந்து இறங்கி வெளியே சென்ற பயணிகளும், ரயிலில் ஏறுவதற்காக நிலையத்திற்கு வந்த பயணிகளும் அவதியடைந்தனர். நடைமேடைகளில் நடந்து செல்வதற்கும், நிலையத்திற்குள் வந்து செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டது. இரவு நேரத்தில் ஏராளமானோர் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை, பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.