Thoothukudi Mu*der | தாயை கொ*றுவிட்டு மகள்களை கடத்தி சென்ற சம்பவம் - தந்தையும் பலி..

தாயை கொ*றுவிட்டு மகள்களை கடத்தி சென்ற சம்பவம் - தந்தையும் பலி..

#Thoothukudi #CrimeNews #TNPolice #ThanthiTV

Thoothukudi Mu*der | தாயை கொ*றுவிட்டு மகள்களை கடத்தி சென்ற சம்பவம் - சிகிச்சையில் இருந்த தந்தையும் பலி.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இந்த தம்பதிக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14), பிளெசெட் ராஜா (10) என 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், குடும்பத்தினரை சரமாரியாக வெட்டியது. இதில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துகிருஷ்ணன், அவரது மகன் பிளெசெட் ராஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்துகிருஷ்ணனின் 2 மகள்களையும் அந்தக் கும்பல் கடத்திச் சென்ற நிலையில், காவல்துறையினர் செல்போன் கோபுரத் தொடர்புகளைக் கண்காணித்து ஆனந்தபுரம் பகுதியில் இருவரையும் மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஞானபிரகாஷ் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முத்துகிருஷ்ணனின் மகளைக் காதலித்த ஞானபிரகாஷுக்கு, அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தச் சம்பவம் அரங்கேறியது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முதலூரில் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com