போரூர் சமயபுரம் ஐந்தாவது தெருவில் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காலையில் திசை மாறி இருப்பதும் அதனை வீட்டு உரிமையாளர்கள் சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளாடை அணிந்து கொண்டு கையில் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் ஒவ்வொரு வீடாக ஜன்னல்களை திறந்து நோட்டமிடுவது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மர்ம நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.