தமிழ்நாடு

`பெண் காவலரிடமே அத்துமீறல்' - கொ*ல, அத்துமீறல், செயின் அறுப்பு.. ரயில் நிலையங்கள் பாதுகாப்பானவையா?

தந்தி டிவி

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் இரவு நேரங்களில் முன், பின் யாராவது வருகிறார்களா? என்ற பதைபதைப்போடு பெண்கள் நடக்க வேண்டியதுள்ளது.

புறநகர் ரயில் நிலையங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த பகுதிகளை கடப்பது, பறக்கும் ரயில் நிலையங்களில் மின் விளக்குகள் இல்லாத இடங்களை கடப்பது எல்லாம் பயணிகளுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இந்த சூழலில், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறிக்கப்பட்டு, அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பதுடன், மீண்டும் ரயில் நிலையங்கள் பாதுகாப்பானவையா? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

சென்னையில் 2016-ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் சுவாதி படுகொலையை தொடர்ந்து ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.....

நிர்பயா திட்டத்தில் கேமராக்கள் பொருத்தும் பணி ஆமை வேகத்தில் நடந்தபோது, ரயில் நிலையங்களில் குற்ற சம்பவங்களும் பதிவாகின.

2023 ஜூலையில் இந்திரா நகர் ரயில் நிலையத்தில், செல்போனை பறித்தவர்களிடம் போராடிய இளம்பெண் பிரீத்தி, ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2023 செப்டம்பரில் தமிழகத்தில் 35 ரயில் நிலையங்களில் மட்டுமே சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதாக ரயில்வே தெரிவித்தபோது, உயர்நீதிமன்றம் கடுமையாக கடிந்துக் கொண்டது.

சென்னை கோட்டத்தில் 160 புறநகர் ரயில் நிலையங்களில் 57 ரயில் நிலையங்களில் மட்டுமே குறைந்தப்பட்சம் நடைமேடைகளில் சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சென்ட்ரல் - கூடூர், சென்னை - ஜோலார்பேட்டை , சென்னை - விழுப்புரம் மார்க்கத்தில் 74 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடப்பதாகவும், மார்ச் மாதம் பணிகள் முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ரயில் நிலைய பாதுகாப்பு குறித்து அச்சத்தை அதிகரித்திருக்கிறது.....

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்