தமிழ்நாடு

Chennai NEET Protest | சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் - மாணவர்கள் அதிரடி கைது

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் - மாணவர்கள் அதிரடி கைது

thanthitv

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் - மாணவர்கள் அதிரடி கைது சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைப்பதாக கூறி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றபோது, போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

BREAKING || சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு

Pralhad Joshi | மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார் பிரகலாத் ஜோஷி

Minister Nirmal Kumar | மேகதாது முதல் ராமதாஸ் வரை.. மொத்தத்தையும் போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்

senthil balaji | "நானே சொல்றேன்.." விசாரணை முடிந்த கையோடு செ.பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

Minister Sengottaiyan | "ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.." - சூளுரைத்த அமைச்சர் செங்கோட்டையன்