தமிழ்நாடு

நீரில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் - மதுரவாயல் அருகே பரபரப்பு

சென்னை மதுரவாயல் அருகே தடையை மீறி தரை பாலத்தை கடக்க முயன்ற தாய் , தந்தை , மகன்கள் என நான்கு பேர், நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

தந்தி டிவி

கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக வானகரம் அடையாளம்பட்டு உள்ளிட்ட தரை பாலங்கள் வழியாக நீர் அதிக அளவில்

பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாலத்தை கடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் தரைப்பாலத்தில், தடையை மீறி சென்றார். அப்போது இரு சக்கர வாகனம், நிலை தடுமாறியதில் நான்கு பேர், அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வேணுகோபால் அவரது மனைவி ஒரு மகன் ஆகிய மூவரை பத்திரமாக மீட்டனர். மேலும் நீரில் அடித்து மற்றொரு மகன் குமரேசனை தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு