சென்னை - திருவெற்றியூரில் வீடு வாடகைக்கு பார்ப்பது போல் நடித்து ரமணியம்மாள் என்ற மூதாட்டியிடம் 7 சவரன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தருவதாக கூறி வீட்டிற்குள் சென்ற அந்த மர்ம நபர், மூதாட்டியிடம் நகையை பறித்து கொண்டு வெளியில் தாழ்ப்பாளை போட்டு விட்டு தப்பி யோடி விட்டார். 4 மணி நேரமாக வீட்டிற்குள் தவித்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.