திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சுவர்கள் சிதிலம் அடைந்து கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். கட்டிடம் இடிந்து உயிர்சேதம் ஏற்படும் முன்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை வெறு இடத்திற்கு மாற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.