சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்றுள்ளனர். ருக்மணி என்ற அந்த மூதாட்டியிடம் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். நகை பறிப்பில் ஈடுபட்ட சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.