புதுக்கோட்டையில் நவராத்திரி, விஜயதசமி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி வாழைப்பழம் விற்பனை அதிகரித்துள்ளது. கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் புதுக்கோட்டை சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன. இதில் ஒரு வாழைத்தார் 300 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.