தமிழ்நாடு

ஆவடியில் வயதான தம்பதிகள் கொல்லப்பட்ட சம்பவம் : கொலையில் தேடப்பட்டு வரும் நபர் குறித்து திடுக்கிடும் தகவல்

ஆவடியில் வயதான தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது ஆந்திர மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி
சென்னை ஆவடியை சேர்ந்த ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி விலாசினி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த சுரேஷ் மாயமானார். இந்த நிலையில் சுரேஷை தேடி அவரது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு சென்ற போலீசார் அங்கு அவர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவரைப் பற்றி அங்கு விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் அந்த பகுதியில் பிரபல கொள்ளையன் என்பதும், ஒரு பாலியல் வழக்கு மற்றும் 22 கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையின் போது ஆந்திர போலீசாரை தாக்கியதாகவும் இவர் மீது ஒரு வழக்கு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை இரட்டைக் கொ*ல சம்பவம் | உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்

Breaking | Ammonia Gas Leak | ``வெளியேறுங்கள்..'' | தடைசெய்யப்பட்ட பகுதி - வெளியான அறிவிப்பு

Gold Price | Silver | ஒரேநாளில் 2வது முறை... பெரும் இடியை இறக்கிய தங்கம் விலை

Ravi Mohan house theft | ரவி மோகன் வீட்டில் நடந்த திருட்டு.. வெளியான பரபரப்பு தகவல்

Breaking | Private College Fees | எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு எவ்வளவு கட்டணம்?