புதுக்கோட்டையில் ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் வசித்து வந்தவர் பத்மநாபன். இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பத்மநாபன் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.