அப்போலோ நிர்வாக அலுவலர் சுப்பையா விஸ்வநாதன், நமது எம்.ஜி.ஆர்.நாளிதழ் பொறுப்பாசிரியர் ஆனந்தன், அப்போலோ மருத்துவர் செந்தில்குமார், போயஸ்தோட்ட முன்னாள் ஊழியர் ஞானசேகரன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு ஏன் கொண்டு செல்லவில்லை என்ற காரணம் குறித்து விளக்கம் அளித்தார்.