அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை, தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்ணாடி வழியாக பார்த்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவை பார்த்தது தொடர்பாக ரமேஷிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்து விசாரணை நடக்கிறது. காலையில் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், மதியமும் விசாரணை தொடர்கிறது.