இதற்காக பிரத்யேக மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மென்பொருள் உருவாக்கும் பணியை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மேற்கொண்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தபின் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேருவதற்கான அழைப்பாணைகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பொறியியல் மாணவர் சேர்க்கை எப்படி ஆன்-லைன் வழியில் நடை பெறுகிறதோ , அதே முறையில் இந்த மாணவர் சேர்க்கை பணிகளும் நடைபெற உள்ளன.