தமிழ்நாடு

பொங்கி எழுந்த மீனவர்கள்.. போராட்ட களமாக மாறிய தங்கச்சிமடம்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14 மற்றும் 28 ஆம் தேதிகளில் மீன் பிடிக்க சென்ற 10 விசைப்படகுகள் மற்றும் 64 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதேபோல, கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை வசம் உள்ள 132 படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி