அனுமதியின்றி பேரணியும், போராட்டமும் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி, குழந்தை, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட ஆயிரத்து 500 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தில் நியாயமான குரல்களை நசுக்க தமிழக அரசும், காவல்துறையும் முயலக் கூடாது என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.