தமிழ்நாடு

"சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி திமுக அல்ல" - ஆ. ராசா

தேசிய புலனாய்வு அமைப்புச் சட்டத் திருத்தம் விவகாரத்தில், தி.மு.க.வை மையப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்

தந்தி டிவி

கடந்த 15ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்புச் சட்ட திருத்தத்தை திமுக ஆதரித்தது. இது குறித்து தவறான தகவல்கள், சமூக வளைதலங்களில் பரப்படுவதாக அக்கட்சியின் எம்.பி. ஆ. ராசா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை தாக்குதலை தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் ​தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாக ஆ.ராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக குற்றச் செயலில் ஈடுபடும் எவருக்கும் ​தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் பொருந்தும், இந்தியாவுக்கு வெளியில் சென்று விசாரிக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சிறப்பு உரிமைகள் ஆகியவற்றை அதிகாரிகளுக்கு தருவது, குற்றம் ஒன்றை வெளிநாட்டில் நிகழ்த்தினாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்கு பதிவது, இந்தக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவது ஆகியவை மட்டுமே இந்த சட்டத்திருத்தத்தில் உள்ளதாக ஆ. ராசா கூறியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியை போல் திமுகவை சித்தரிப்பதை கண்டிப்பதாக ஆ.ராசா கூறியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்