#bhavanisagardam #kongumandalam
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு 2,555 கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 6,722 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 74.72 அடியாகவும், நீர் இருப்பு 13.04 டிஎம்சி ஆகவும் உள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் இந்த அணையிலிருந்து, குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 50 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும் என மொத்தம் 55 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.