பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் பெங்களூருவை சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ மற்றொரு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த மாணவியின் தாயார் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் மீது மேலும் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.