தமிழ்நாடு

Thoothukudi Latest News | தூத்துக்குடியில் 19 வயது இளைஞர் வெட்டி படுகொலை

தூத்துக்குடியில் 19 வயது இளைஞர் வெட்டி படுகொலை

thanthitv

#thoothukudimurder #thoothukudinews தூத்துக்குடி, தாளமுத்து நகரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாளமுத்து நகரை சேர்ந்த மாரி செல்வம் என்ற 19 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் மாரி செல்வத்தை, 4 பேரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாரி செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை தாளமுத்து நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய புவனேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

BREAKING || புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு - யார் யாருக்கு என்ன இல்லம்?

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி