ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் பூக்கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தி.நகர் துணை கமிஷனராக அசோக்குமார், மாதவரம் போலீஸ் துணை கமிஷனராக ரவாலி பிரியா, சென்னை கிழக்கு இணை கமிஷனராக பாலகிருஷ்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக அன்பு, சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராக ஜார்ஜி ஜார்ஜ் உட்பட 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணிஇடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.