விளையாட்டு

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த "தோனி":

300 கேட்ச் பிடித்த 'முதல் இந்திய விக்கெட் கீப்பர்',அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த '2வது விக்கெட் கீப்பர்' என்ற சாதனையை தோனி படைத்தார்.

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஜோஸ் பட்லர் அவுட் ஆனார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் 300வது கேட்ச் ஆக பதிவானது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 கேட்ச் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த தோனி, 33 ரன்களை எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இலங்கையின் சங்ககாராவிற்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். சச்சின், கங்குலி, டிராவிட்டை தொடர்ந்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்