விளையாட்டு

"வீராங்கனைகள் செஸ் ஆடும்போது விளையாட்டைப் பார்ப்பதில்லை" - திவ்யா தேஷ்முக் வருத்தம்

தந்தி டிவி

நெதர்லாந்தில் நடைபெற்ற செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 12வது இடம் பிடித்தார். திவ்யா தேஷ்முக் அளித்த பேட்டி ஒன்றில் பாலியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை பலர் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில், இதுபோன்ற வெறுப்பு கருத்துகளை,, தான் தொடர்ந்து சந்தித்து வருவதாக திவ்யா தேஷ்முக் பதிவிட்டுள்ளார். வீராங்கனைகள் செஸ் ஆடும்போது பலரும் ஆட்டத்திறனை பார்ப்பதில்லை என்று கூறியுள்ள, தன்னுடைய உடை, சிகை, உச்சரிப்பு ஆகியவற்றை வைத்து பாலியல் ரீதியிலான கருத்துகள் முன்வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். செஸ்ஸில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பெரிதாக பாராட்டைப் பெறுவதில்லை என்று கூறியுள்ள அவர், வீராங்கனைகளுக்கும் சமமாக மரியாதை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்