இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடல்களுக்கு டிக்-டாக்கில் நடனமாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் இங்கிலாந்திலும் ஊரடங்கு நிலவும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள், டிக் டாக்கில் இந்திய பாடல்களுக்கு நடனமாடி தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் டிக்-டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வரிசையில் கெவின் பீட்டர்சன் இணைந்துள்ளார்.