போட்டி நடைபெறும் வாங்கடே மைதானத்தில், இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று நடைபெறும் போட்டி, இரவு 7 மணிக்கு துவங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. எனவே, தொடரை வெல்ல, இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால், போட்டி, மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.