விளையாட்டு

UNDER-19 கிரிக்கெட்டில் அதிவேக சதம் - வைபவ் சூரியவன்ஷி சாதனை

தந்தி டிவி

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய UNDER 19 அணி, வொர்செஸ்டர் Worcester நகரில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி அதிரடி ஆட்டத்தால் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

மொத்தம் 78 பந்துகளில் 10 சிக்சர்கள், 13 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் சேர்த்து கலக்கினார் வைபவ்...

ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் சதமடித்தவர் என்ற சாதனையை படைத்த வைபவ் சூரியவன்ஷி, தற்போது 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

Tiruchengode | தேர் சக்கரத்தில் நசுங்கிய இளைஞர்.. திருவிழாவில் நடந்த கொடூரம்

Thirumavalavan | Tirupati | திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்

Madurai | சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. போக்சோவில் தூக்கிய போலீசார்

IPL 2026 | RCB Vs GT | வெறியாட்டம் ஆடி ஃபைனலுக்குள் நுழைந்த RCB, GT - வெல்லப்போவது யார்?

Chennai Jewells Crime | சென்னையில் இலவச நகை பாலிஷ் - பெண்ணிடம் நைசாக பேசி கைவரிசை