இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் திருமணம் தொடர்பான சுவாரஸ்ய தகவலை முன்னாள் வீரர் ரெய்னா பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு தனது காதலியான சாக்ஷியை தோனி கரம்பிடித்தார். தோனியின் திருமணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரெய்னா, திடீரென தொலைபேசியில் அழைத்து திருமணம் நடைபெற இருப்பதாக தோனி தன்னிடம் கூறியதாகவும், யாரிடமும் சொல்லமால் அமைதியாக வரவேண்டும் என்று தோனி அறிவுறுத்தியதாகவும் ரெய்னா கூறியுள்ளார். அவசரமாக சென்றதால் தோனியின் உடைகளைத் தான் அவரது திருமணத்தில் தான் அணிந்து இருந்ததாகவும் ரெய்னா பேசியுள்ளார்