ஊழல் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உமர் அக்மல் மீது விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் பின்பு முழு தண்டனை விவரம் வெளியிடப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதுவரை, எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உமர் அக்மல் பங்கேற்க அனுமதி தரப்பட மாட்டாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது