ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை சபலென்கா உடன் மேடிசன் கீஸ் பலப்பரீட்சை நடத்தினார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-க்கு 3, 2-க்கு 6, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் கீஸ் போராடி வெற்றி கண்டார். அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை இஹாவை கீஸ் வீழ்த்தி இருந்த நிலையில், தற்போது சபலென்காவையும் சாய்த்து தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கீஸ் வசப்படுத்தியுள்ளார்.