அரசியல்

திருப்பரங்குன்றம் - 2வது இடைத்தேர்தல்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் 2வது இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது, மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி.

தந்தி டிவி

மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில், பரப்பளவில் மிகப் பெரிய தொகுதி திருப்பரங்குன்றம்.

2018ஆம் ஆண்டு, ஜனவரி நிலவரப்படி, மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 82 ஆயிரத்து 552 பேர்.

கடைசியாக நடைபெற்ற 2016 பொதுத் தேர்தலில் 47 சதவீதம், பின்னர் நடந்த இடைத்தேர்தலில் 55 சதவீதம் என பெருவாரியான வாக்குகள் பெற்று, அதிமுக வென்றது.

அதிமுக கோட்டையாக விளங்கும் இங்கு இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில், 8 முறை அதிமுகவும், ஒரு முறை அதிமுக கூட்டணியுடன் தேமுதிகவும் வென்றுள்ளன.

ஆரம்பத்தில் காங்கிரஸ் தொகுதியாக இருந்த திருப்பரங்குன்றத்தை, 1967, 1971 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திமுக கைப்பற்றியது. 1977 ஆண்டு தேர்தலில் அதிமுகவின் காளிமுத்து, திருப்பரங்குன்றத்தை தனதாக்கினார்.

இடையில் 1989, 1996 ஆகிய தேர்தல்களில், இந்த தொகுதி திமுக பக்கம் மாறியது.

ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு, பலத்தைக் காட்ட வேண்டிய அவசியம் அதிமுக-வுக்கு உள்ளது.

டெபாசிட் இழந்ததால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்வது திமுக-வுக்கும், ஆர்.கே.நகர் போல வெற்றி தொடருமா என்பது டிடிவி தினகரனுக்கும் அவசியம்.

புதிதாக களத்தில் குதித்துள்ள கமல்ஹாசன் கட்சி போட்டியிடுமா? ரஜினிகாந்த் என்ன செய்வார்? நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை இந்த இடைத்தேர்தல் தீர்மானிக்குமா? போன்ற கேள்விகள், திருப்பரங்குன்றம் தேர்தல் களத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்குகின்றன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி