சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்
சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி
உடனடியாக சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை கைது செய்வீர்கள் என தமது சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.