அரசியல்

"சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கிறேன்" - நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

சர்கார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் விஜய் பேசியதை பார்க்கலாம்...

தந்தி டிவி

* மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது.. சர்கார் படத்தில் அரசியலிலேயே மெர்சல் பண்ணியிருக்கோ​ம்.

* வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமாலும் உழைக்கலாம் , ஆனா வெற்றி பெறக்கூடாதுங்றதுக்காக ஒரு கூட்டமே உழைச்சிட்டு இருக்கு...

* உசுப்பேத்துகிறவர்களிடம் உம்முன்னு இருக்கனும், கடுப்பேத்துகிறவர்களிடம் கம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இதை நீங்களும் பாலோ பண்ணுங்க.

* தேர்தலில் போட்டியிட்டு, பிரச்சாரம் செய்து, ஜெயித்து சர்கார் அமைப்பாங்க ... ஆனால், நாங்க சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கிறோம், படத்தை பார்த்துட்டு ஓட்டு போடுங்க..

* சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை - நிஜத்தில் முதலமைச்சரானால், நடிக்க மாட்டேன்

* நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன்

* பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது..

* கீழ் மட்டத்தில் ஏன் லஞ்சம் உள்ளது என்றால், மேல்மட்டத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதால் தான் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் மற்ற அனைவருக்கும் ஒரு பயம் வரும்..

* நாம் சரியாக இருந்தால் மற்ற அனைத்தும் சரியாக இருக்கும்

* தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும் ,ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜெயிக்கும் புழுக்கம் ஏற்பட்டா மழை வர்ற மாதிரி, ரொம்ப நெருக்கடி ஏற்பட்டா தகுதியானவனை ஆட்டோமேடிக்கா உள்ளே கொண்டு வந்து சேர்த்துவிடும் அங்க ஒருத்தன் கிளம்பி வருவான் பாருங்க, அடிபட்டு, நொந்து நூலாகி, அவன் லீடரா மாறுவான், அது இயற்கையானது,அவனுக்கு கீழே அமையும் பாருங்க ஒரு சர்கார்..

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்