அரசியல்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பு

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரியை, இன்று பிற்பகல் 2 மணிக்கு பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்கள் ஆதரவு போதுமான நிலையில் இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க இதுவரை முன்வரவில்லை. தேர்தல் முடிவு வெளிவந்து 14 நாட்கள் முடிந்த நிலையில் நாளைக்குள் பதவியேற்காவிட்டால் நாளை மறுநாள் முதல் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முதலமைச்சர் பதவி தொடர்பான சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. சிவசேனா தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரவில்லை என கூறப்படும் நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையிலான அக்கட்சியின் மூத்த தலைவர் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்தித்து பேச உள்ளனர். இதனிடையே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. இழுக்க முயற்சித்து வருவதாக சிவசேனா கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் சிவசேனா மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணி நாளைக்குள் ஆட்சி அமைக்க இயலாத நிலையில், சனிக்கிழமை மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என கூறப்படுகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்