சென்னையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால், எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மண்ணடியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் கூடிய அவர்கள், பிரதமர் மோடி ராஜஸ்தான் மக்களிடையேயாற்றிய உரையை கண்டித்தும், அதற்கு தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருவதை கண்டித்தும் முழக்கமிட்டனர். அனுமதி பெறாமல் முற்றுகை போராட்டம் நடத்தியதால் ஆண்கள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி இனி எந்த மேடையிலும் பேசாமல் இருக்க, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினர்.