தேர்தல் பறக்கும் படையினருடன் நாம் தமிழர் வேட்பாளர் கடும் வாக்குவாதம் உதகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரகுபதி பீமன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி அருகே வாகன சோதனையின் போது, உரிய அனுமதியின்றி வாகனத்தில் கட்டப்பட்டிருந்த கட்சி கொடியை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், அனுமதி பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் செயலி (App) செயல்படவில்லை எனக் கூறி, நாம் தமிழர் வேட்பாளர் அதிகாரிகளுடன் ஆவேசமாக மல்லுக்கட்டினார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, கட்சி கொடி அகற்றப்பட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.